வாஸ்து நாட்கள் மற்றும் வாஸ்து செய்ய நல்ல நேரம்

வீடு கட்ட துவங்குவதற்கு முன் பூமி பூஜை செய்வதற்கே வாஸ்து சாஸ்திரம் பார்த்து அந்த வீட்டை அமைப்பது தான் வழக்கமாக கடைபிடிக்கப்படுகிறது. புராணங்களின் படி, வாஸ்து பகவான் வீடு கட்ட துவங்கும் போது வாஸ்து சாஸ்திரம் பார்த்து அந்த வீட்டை அமைப்பது தான் வழக்கமாக கடைபிடிக்கப்படுகிறது. ஒரு வருடத்தில் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என 8 மாதங்களில் மட்டுமே வாஸ்து நாட்கள் வரும்.

புராணங்களின் படி, வாஸ்து பகவான் தூக்கத்தில் இருந்து கண் விழிக்கும் நாட்களே வாஸ்து நாட்கள் எனப்படுகின்றன. இந்த நாட்களில் மட்டுமே வாஸ்து தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சொல்லி வைத்துள்ளார். இந்த 8 மாதங்களில் வரும் 8 நாட்களும் எல்லா வருடமும் ஒரே மாதிரி தான் இருக்கும்.

சிவ புராணத்தின் படி, சிவ பெருமான் அந்தகாசுரனை வதம் செய்த போது அவரின் வியர்வை துளிகளில் இருந்து தோன்றி குட்டி பூதத்தையே வாஸ்து பகவான் என்கிறோம். இந்த பூதம் பூமிக்கு அடியில் எப்போதும் தூங்கிக் கொண்டிருக்கும் என்றும், வருடத்திற்கு எட்டு நாட்கள் மட்டுமே கண் விழிக்கும் என்றும் புராணங்கள் சொல்கின்றன. இந்த எட்டு நாட்களும் கூட குறிப்பிட்ட ஒன்றரை மணி நேரத்தில் மட்டுமே கண் விழித்திருப்பார் என பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுறது.

இந்த ஒன்றரை மணி நேரம் அல்லது சில நாளிகைகளை தந்தாபனம், ஸ்நானம், பூஜை, போஜனம், தாம்பூலம், சயனம் என 15 நிமிடங்கள் வீதம் 6 பாகங்களாக பிரிக்கிறார்கள். இதிலும் முதல் 75 நிமிடங்கள் கழிந்த பிறகு போஜனம், தாம்பூலம் என குறிப்பிடப்படும் நேரத்தில் பூமி பூஜை செய்து, வீடு கட்ட துவங்கினால் எந்த வித தடையும் இன்றி வீடு கட்டி முடிக்கலாம் என நம்பப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில் எந்த கிழமையில் இந்த 8 வாஸ்து நாட்கள் வருகின்றன, இந்த நாட்களில் எந்த நேரம் வாஸ்து செய்வது ஏற்ற நேரம் என்பதை இங்கே பார்க்கலாம்.

தமிழ் மாதம்நல்ல நேரம்
தை 12காலை 10.41 முதல் 11.17 வரை
மாசி 22காலை 10.32 முதல் 11.08 வரை
சித்திரை 10காலை 08.54 முதல் 09.30 வரை
வைகாசி 21காலை 09.58 முதல் 10.34 வரை
ஆடி 11காலை 07.44 முதல் 08.20 வரை
ஆவணி 06காலை 07.23 முதல் 07.59 வரை
ஐப்பசி 11காலை 07.44 முதல் 08.20 வரை
கார்த்திகை 08காலை 11.29 முதல் 12.05 வரை
error: Content is protected !!
Scroll to Top