குழி கணக்கு சாஸ்திரம்  :- கட்டிடத்தின் வெளி பக்க அளவுகளை கணக்கிட்டு குழி கணக்காக மாற்றி 11 பொருத்தங்களில் எத்தனை பொருத்தங்கள் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதில் அதிக நன்மைகள் தரக்கூடிய  பொருத்தங்கள்   வரும்படியாக கட்டிடம் கட்ட வேண்டும்.  முக்கியமாக  கட்டிடத்திற்கு  அதிகமான வயது வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆயாதி குழி கணக்கு முறை 1

34″ * 34″ = 1 குழி
34″ * 34″ = 1156 Sq.inch
12″ * 12″ = 1 Sq.ft
12″ * 12″ = 144 Sq.inch
1156/144 = 8.028
1 குழி = 8.028 Sq.ft

மனை அளவு

28 * 29 = 812 Sq.ft
812 / 8.028 = 101 குழி

ஆயாதி குழி கணக்கு முறை 2

36″ * 36″ = 1 குழி
36″ * 36″ = 1296 Sq.inch
12″ * 12″ = 1 Sq.ft
12″ * 12″ = 144 Sq.inch
1296/144 = 9 Sq.ft
1 குழி = 9 Sq.ft

மனை அளவு

28 * 29 = 812 Sq.ft
812 / 9 = 90 குழி

பொருத்தங்கள் மொத்தம் 11 அவைகள்
1. கருப்பம்
2. வரவு
3. செலவு
4. யோனி
5. வயது
6. இராசி
7. இனம்
8. அங்கிசம்
9. நட்சத்திரம்
10. திதி
11. வாரம்

[வகுக்கபடும் போது மீதி வர வில்லை என்றால் வகுக்கபடும் எண்ணை மீதி எண்ணாக கொள்ள வேண்டும்]

1. 1. கருப்பம் :- ஆதாயம், பலன், கற்பம் என்றுப் பொருள். இடத்தின் அளவுப் படி குழிகளை கணக்கிட்டு வந்த குழி எண்ணிக்கையை 8 ல் வகுக்க, வகுத்து மீதி வரும் எண் கற்ப எண் எனப்படும். மீதி இல்லையானால் மீதி 8 என்று எடுத்துக்கொண்டு பலன் காண வேண்டும்.
சிறப்பான எண் – 1, 2, 3, 5, 7
உதாரணம் :- அகலம் 27 அடி, நீளம் 39 அடி

27 * 39 / 9 = 117 குழிகள்

மொத்த குழிகள் 117 ஐ 8 ல் வகுக்க வருவது 14 ம் மீதி 5 தும் இந்த 5 கற்ப எண் எனப்படும். இந்த 5 சிறப்பான எண் (சிறப்பு ,2,3,5,7) ஆகவே கருப்பம் பொருத்தம் உண்டு என்றுக் கொள்ள வேண்டும்

  1. வரவு பலன்  :-  மொத்தக் குழியை 8 ல் பெருக்கி பெருக்குத் தொகையை 12 ல் வகுக்க வந்த மீதி வரவு எனப்படும். மீதி இல்லையானால் மீதி 12 என்று எடுத்துக்கொண்டு பலன் காண வேண்டும் 

அனைத்து எண்களும் சிறப்பானவைகளே   ஆனால் இதில் பார்க்க வேண்டியது அடுத்து வரக்கூடிய செலவு எண்ணை விட இந்த எண் அதிகமாக வரவேண்டும்.

  1. செலவு பலன்:- மொத்த குழியை  9 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 10 ல் வகுக்க வரும் மீதி எண் செலவு எண் எனப்படும். மீதி இல்லையென்றால் மீதி 10 செலவு எண்ணாக  கொள்ள வேண்டும் 

சிறப்பான எண்கள் – 3, 4, 6, 8, 10.

  1. யோனி பலன் :-  மொத்தக் குழியை 3 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 8 ல் வகுக்க வரும் மீதி யோனி எண் மீதி வரவில்லையானால் மீதி 8 ஆக கொள்ள வேண்டும்.

சிறப்பு எண்கள் – 1, 3, 5, 7.

  1. வயது பலன் :-  மொத்தக் குழியை 27 ல் பெருக்கி, வந்தத் தொகையை 100 ல் வகுக்க மீதி வரும்எண் கட்டடத்தின் வயது ஆகும் மீதி வராவிடில் வயது எண் 100 ஆக கொள்ள வேண்டும்.

வயது எண்  45 க்கு மேல் வருவது நல்லது வயது எண் அதிகமாக, அதிகமாக சிறப்பானது 

  1. இராசி பலன் :- மொத்த குழியை  4 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 12 ல் வகுக்க மீதி வரும் எண் இராசி எண் ஆகும் 

சிறப்பான எண்கள் – 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12.

  1. இனம் பலன்கள் :- மொத்தக் குழியினை 9 ல் பெருக்கி, வந்த தொகையை 4 ல் வகுக்க மீதி வருவது இன எண் ஆகும் 

சிறப்பான எண்கள் – 1, 2, 3.

  1. அங்கிச பலன்கள் :- மொத்தக் குழியை 4 ல் பெருக்கி வந்த தொகையை 9 ல் வகுக்க வரும் மீதி அங்கிசம் எண் ஆகும்.

சிறப்பான எண்கள் – 2, 3, 4, 5, 6, 8, 9.

  1. நட்சத்திர பலன் :-மொத்தக்  குழியினை 8 ல் பெருக்கி, பெருக்குத் தொகையினை 27 ல் வகுக்க மீதி வரும் எண் நட்சத்திர எண் ஆகும் .

சிறப்பான எண் – 1, 4, 6, 7, 10, 11, 12, 14, 15, 17, 21, 22, 24, 26.

  1. திதி பலன்கள் :-  மொத்தக் குழியினை 9 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 30 ல் வகுக்க மீதி வரும் எண் திதி எண் ஆகும் 

சிறப்பான எண்கள் – 1, 2, 3, 5, 6, 7, 10, 12, 13, 15, 16, 17, 18, 20, 21, 22, 25, 27, 28, 30

 

  1. வாரபலன்கள் :- மொத்த குழியினை 9 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 7 ல் வகுக்க  வரும் மீதி நாள் எண் ஆகும்.

சிறப்பான எண்கள் – 2, 4, 5, 6.

error: Content is protected !!
Scroll to Top